ஜிமெயிலை திறக்க பாஸ்வேர்டுக்கு பதிலாக பாஸ்கோடு – விரைவில் அறிமுகம்

இனி பாஸ்கோடு இருந்தால் மட்டுமே ஜிமெயிலின் மெயிலை திறக்க முடியும் என்ற புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

நான்கு நாட்களுக்கு முன் ஜிமெயில் புதிய வெப் டிஷைன் பற்றி அறிவிப்பு வெளியாகியது. அதில் கூகுள் நிறுவனம் இ-மெயில் சேவை மிகவும் பாதூகாப்பானதாக மாற்றப்படும் என தகவல் வெளியாகியது.

அதன்படி, நமது மெயிலை பெறுபவர்கள், அதனை ஃபார்வேடு (forward), டவுன்லோடு செய்ய மற்றும் பிரின்ட் அவுட் எடுப்பதை நாம் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் வசதியை வழங்க இருக்கிறது.

இந்நிலையில், ஜிமெயில் பயனாளர்கள் தங்கள் இ-மெயில்களை திறக்க இனி பாஸ்வேர்டுக்கு பதிலாக பாஸ்கோடு தேவைப்படும் என அறிவித்துள்ளது.

நாம் குறுஞ்செய்தி வழியாக பாஸ்கோடு பெற்று, பின்னர்தான் மெயிலை திறக்கும் விதமான வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஜி.மெயில் பயனாளர்கள் தங்கள் அனுப்பும் மெயில்களை பாதுகாக்கும் பொருட்டு தங்கள் மெயில்களுக்கு பாஸ்கோடுடன் அனுப்பலாம்.

அந்த மெயிலை பெறுபவர்கள் குறுஞ்செய்தி வழியாக பாஸ்கோடு பெற்ற பின்னரே அந்த மெயிலை திறக்க முடியும்.

மேலும், நாம் அனுப்பும் மெயில்களுக்கு காலாவதியாகும் தேதியை நாமே நிர்ணயம் செய்யலாம்.

அதாவது நாம் அனுப்பும் மெயிலானது குறிப்பிட்ட காலம் மட்டுமே மற்றொருவர் ஜிமெயில் தளத்தில் இருக்கும்படி நாமே காலநிர்ணயம் செய்துகொள்ளலாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் நம்மால் மெயிலை திறக்க முடியவில்லை என்றால் கவலைப்படத்தேவையில்லை. அதற்காக கூகுள் ஸ்நூஸ் (snooze) என்ற புது விதமான வசதியும் அளிக்கப்படவுள்ளது.

அதன் மூலம் மீண்டும் சில நேரங்களுக்கு அந்த மெயில் நம்முடைய மெயில் பாக்ஸில் இருக்கும்.

இந்த புதிய வசதி விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.