வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும்

ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவதோடு மட்டுமின்றி இனி பண தேவையை கூறி பணம் வேண்டும் என கேட்க முடியும்.

முன்னதாக வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் கொண்டு பணம் அனுப்பக்கூடிய வசதி மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பணம் வேண்டுமென காண்டாக்ட்களிடம் கோரிக்கை விடுக்க முடியும். புதிய அம்சம் யுபிஐ ஐடி (UPI ID) அல்லது கியூஆர் கோடு (QR Code) மூலம் மட்டுமே வேலை செய்கிறது.

இதனால் காண்டாக்ட்-ஐ நேரடியாக தேர்வு செய்தால் இந்த அம்சம் வேலை செய்யாது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.113 வெர்ஷனில் காணப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குறைந்தளவு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் யுபிஐ (UPI) மூலம் இயங்குகிறது.

புதிய அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — பேமெண்ட்ஸ் — நியூ பேமெண்ட்ஸ் — யுபிஐ ஐடி அல்லது ஸ்கேன் கியூஆர் கோட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் ஒரு ஆப்ஷனை கிளிக் செய்த பின் பணம் அனுப்பவோ அல்லது கேட்கவோ திரையில் தெரியும் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

முன்னதாக பணம் அனுப்பும் ஒற்றை ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் பணம் அனுப்புவது மற்றும் பணம் அனுப்ப சொல்வது என இரண்டு ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்கு வேலை செய்யும். புதிய பணம் அனுப்ப சொல்லும் அம்சம் குறைந்த அளவிலான ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.