மாங்காயை தேன் ,உப்பு கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..?

கோடைக்காலத்தில் எது அதிகம் கிடைக்கும் என்று கேட்டால், அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது மாங்காய் தான்.

இந்தியா போன்ற வெப்பமயமான நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

மாம்பழத்தை விரும்பி சாப்பிடும் நாம், மாங்காயையும் விரும்பி சாப்பிட வேண்டும். மாங்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

மாங்காய் ஜுஸ் சாப்பிட்டால், உடலில் இருக்கும் அதீத வெப்பம் குறைவதுடன், வெப்பத்தால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கும்.

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து சிறந்த நிவாரணம் தரக் கூடியது மாங்காய் . எனவே அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், உடனே மாங்காய் சாப்பிடலாம். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்பிணிகள் காலையில் ஏற்படும் அதிகமான உடல் சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மாங்காய் உடலில் சக்தியை அதிகரிக்கிறது. எனவே இந்த மாங்காயை நம்முடைய மதிய உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபடலாம்.

மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியல் தொற்றுக்களை சரிசெய்து, குடலை சுத்தப்படுத்துகிறது. எனவே மாங்காய் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மாங்காயில் உள்ள விட்டமின் C சத்துக்கள், நமது உடம்பின் ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரித்து, புதிய ரத்தணுக்களின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது.

மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிட்டு வருவதால், மலச்சிக்கல் பிரச்சனை உடனே நீங்கி விடும். அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மாங்காய் சாப்பிடுவதன் மூலம், பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை தடுத்து பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.