யோகப் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்

யோகா பயிற்சிகளை தொடங்க திட்டமிடுகிறீர்களா? யோகா பயிற்சிகளை செய்யத் தொடங்குவதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் பின்வருமாறு:

 

1.யாரெல்லாம் யோகா செய்யலாம்? (Who can do Yoga?)

உடல்ரீதியாக தகுதியாக உள்ள அனைவரும் யோகா செய்யலாம், அதாவது எந்தவொரு முக்கிய நோயினாலும் பாதிக்கப்படாத நபர்கள் யோகா செய்யலாம்.

2.யோகா பயிற்சிகளை செய்யத் தொடங்குவதற்கான சரியான வயது என்ன, அவற்றை செய்வதற்கு வயது வரம்பு ஏதேனும் இருக்கிறதா? (What is the right age to start and is there any age limit to do Yoga?)

பழங்கால இலக்கியங்களின்படி, எட்டு வயதில் தொடங்கி உங்களால் எவ்வளவு காலம் செய்ய முடியுமோ அவ்வளவு காலம் வரை யோகா பயிற்சிகளை செய்யலாம். புகழ்பெற்ற யோகா குரு ஸ்ரீ. BKS ஐயங்கார் தனது 90 வயதிலும் யோகா பயிற்சிகளை செய்து வந்தார்.அவர் 95 வயது வரை உயிர்வாழ்ந்தார். எனவே, யோகா செய்வதற்கு எந்த வயது வரம்பும் இல்லை.

3.யோகா செய்வதற்கான சரியான நேரம் எது? (What is the right time to do Yoga?)

ஆசனங்களை பகலில் எந்த நேரத்திலும் செய்யலாம்.இருப்பினும் வேதவாக்கியங்களின்படி, ‘பிரம்ம முகூர்த்தமே’ (சூரியன் உதயத்திற்கு முந்தைய இரண்டு மணி நேரத்திலிருந்து சூரிய உதயம் வரை – அதாவது விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை) யோகா செய்வதற்கு சிறந்த நேரம் ஆகும். ஏனெனில் அந்த நேரம்தான் வளிமண்டலம் தூய்மையாக, அமைதியாக யோகா செய்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும்.காலை நேரத்தில் யோகா செய்ய நேரமில்லையெனில், மாலை நேரத்தில் செய்யலாம், அதாவது மாலை 5 மணி மற்றும் 6 மணிக்குள் செய்யலாம்.

 

444 .யோகா செய்யும்போது என்ன மாதிரியான உணவுப் பொருள்களை எந்த நேரத்தில் உண்ண வேண்டும்? (When and what kind of food should one eat while doing Yoga?)

வெறும் வயிற்றில்தான் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும். எனவேதான், காலை நேரத்தில் யோகா செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.வழக்கமாக ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளிகளில் உணவு எடுத்துக்கொண்டு, பின்னர் யோகா பயிற்சிகளை செய்யலாம். மேலும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய குறைந்த காரம் மற்றும் உப்பு கொண்ட சைவ உணவுகளைக் கொண்ட சேட்விக் என்று அழைக்கப்படும் உணவுத்திட்டத்தையே யோகா வலியுறுத்துகிறது.இருப்பினும், அசைவ உணவுகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

5.எந்த வகையான ஆடைகளை அணிய வேண்டும்? (What kind of clothes should one wear?)

யோகா பயிற்சிகளை செய்வதற்கு தளர்வான, லேசான மற்றும் வசதியான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், அதற்கு மாறான ஆடைகளை தவிர்க்கவேண்டும். மேலும் பயிற்சிகளை செய்யும்போது நகைகள், கைக்கடிகாரம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றை அணியக்கூடாது.

6.யோகா செய்வதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா? (Are there any precautions to be taken before starting Yoga?)

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் நோய், காயம் அல்லது உடல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், யோகா செய்யத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லதாகும்.

7.மாதவிடாய் காலங்களில் பெண்கள் யோகா பயிற்சிகளை செய்யலாமா? (Can women do Yoga during periods?)

சில சிந்தனைகளின்படி, பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் யோகா செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனினும், மாதவிடாய் காலங்களில் யோகா செய்வதால் எந்தவொரு தீங்கும் இல்லை. ‘மாதவிடாய் காலங்களில் நாங்கள் யோகா செய்யலாமா?’ என்பதைப் பற்றி மேலும் படிக்க இந்த இணைப்பிற்குச் செல்லவும்.

Leave a Reply

Your email address will not be published.