விருப்பங்களை விதைக்கும் கலை உங்கள் நல்வாழ்க்கைக்கு எப்படி உதவும்?

“மனம் பெசாமலிருக்கட்டும், அப்போது உங்கள் ஆன்மா பேசும். “

விருப்பங்களை விதைத்தல் என்பது நம்மில் பலருக்குப் புதிய விஷயமாக இருக்கலாம். எளிதாகக் கூறுவதானால், நமது குறிக்கோள்களை நமக்கு நாமே கூறிக்கொள்வதே இந்தப் பயிற்சி. ஒரே மாதிரியான வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு சலிப்படைவதிலிருந்து விடுபட இது மிகவும் பலன் தரும் பயிற்சியாகும்.

மனம்: விருப்பங்களை விதைக்கும் கருவி! (Mind: The means of intention setting!)

உலகில் மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி நமது மனமாகும். சரியாகப் பயிற்சி கொடுத்து, முழுமையாகப் பயன்படுத்தினால், நீங்கள் விரும்பும் எதையும் அடைய மனம் உதவும். விருப்பங்களை விதைக்கும் பயிற்சியும் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேற இது உதவுகிறது.

மனதைத் தெளிவாக்கி, மீண்டும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு உங்களைக் கொண்டு வர தியானம் மிகவும் உதவும் என்றாலும், சில சமயம் நமக்கு அதற்கு நேரம் இல்லாமல் போவதுண்டு. நமது நல்லெண்ணங்களை மீண்டும் மனதிற்கு நினைவூட்ட மிகச் சிறந்த வழியாக இப்பயிற்சி உள்ளது.
விருப்பங்களை விதைக்கும் முறை (Steps of Intention setting):

இதைச் செய்ய, சில நிமிடங்களே போதும். இதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள் (Draw a roadmap of your life)

இந்த வாழ்க்கையில் நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சிந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குறிக்கோள்களை அல்லது நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதைக் காட்சிகளாகக் கற்பனை செய்து பார்ப்பது அவற்றை அடைவதற்கு ஒரு முக்கியமான படியாகும். மனம் சந்தேகத்திலிருந்து விடுபட்டு, நம்பிக்கையைப் பெற்று உறுதிபெற இது உதவும். புதிய சவால்களைச் சந்திப்பதற்கான உத்வேகத்தையும் புதிய குறிக்கோள்களை அடைவதற்கான வலிமையையும் பெறும்.

நேர்மறை உறுதி வாக்கியங்களைக் கூறும் பயிற்சியை தினமும் செய்யவும் (Practice positive affirmations every day)

உங்கள் மனதில் விருப்பங்களை விதைப்பதற்கு, உறுதி வாக்கியங்களைப் பதிய வைக்கும் முறையே உதவுகிறது. எதிர்மறை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் விளைவுகளைப் பிரித்தறிய நமது மனதிற்குத் தெரியாது, ஆனால் அது எதிர்மறை எண்ணங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும், அவை நம்மை ஊக்கமிழக்கச் செய்யும். ஆகவே மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால், மனதுடன் எப்போதும் நேர்மறை உரையாடலே இருக்க வேண்டும். உதாரணமாக, “கட்டுக்கோப்பான உடலைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைவேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்பது “ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடை குறைப்பேன்” என்று கூறுவதை விடச் சிறந்த பலனைத் தரும். நீங்கள் “நான் இதைச் செய்வேன்” என்று கூறும்போது, மனம் அதனை எப்போதும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கும், ஒருபோதும் குறிக்கோளை அடையாது. அதிக எதிர்மறை எண்ணங்களுக்கும் இது பொருந்தும்.

இந்தப் பயிற்சியை முதல் முறையாகச் செய்பவர் என்றால், நீங்கள் உறுதி வாக்கியங்களை முயற்சிக்கலாம்.

நான் மிகவும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன்.
தேர்வில் வெற்றிபெறுவது மிக எளிது.
என் வாழ்வில் எனக்கு அதிக அன்பு கிடைக்கிறது.
நான் மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.
நான் ஒரு தலைவராகப் பிறந்துள்ளேன்.
பணம் தானாக என்னிடம் வந்து சேரும்.
நான் சரியான வேலையில் இருக்கிறேன், எனக்குத் தேவையை விட அதிக நேரம் எப்போதும் இருக்கிறது.
எனக்குத் தேவையான அனைத்துமே இயற்கை எனக்குக் கொடுத்துள்ளது
என் வாழ்வில் எனக்குக் கிடைத்துள்ள எல்லாவற்றுக்காகவும் நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன்.

உறுதி வாக்கியங்களை நாள் முழுதும் சில முறை மீண்டும் மீண்டும் கூற வேண்டும். உதாரணமாக, உடற்பயிற்சி செயும்போது அல்லது குளிக்கும்போது உங்களுக்கு நீங்களே இந்த உறுதி வாக்கியங்களை உரக்கக் கூறிக்கொள்ள வேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும்போதும் வீட்டிற்குத் திரும்பி வரும்போதும் வழியிலும் இவற்றைக் கூறிக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் சோர்வாக இருக்கிறீர்களோ அப்போதும் இந்த நேர்மறை உறுதி வாக்கியங்களைக் கூறிக்கொண்டால் உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அகன்றுவிடும். தொடர்ந்து பயிற்சி செய்தால், எதிர்மறை எண்ணங்கள் படிப்படியாகக் குறைவதையும் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகத் தென்படுவதையும் நீங்களே உணர முடியும்.

உங்கள் குறிக்கோள்கள் வடிவம் பெறுவதைக் காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் (Visualise your goals shaping up)

உங்கள் குறிக்கோள்கள் வடிவம் பெற்று, அதன் விளைவுகள் உங்கள் கண் முன்னே கிடைத்தது போலக் காட்சியாகக் கற்பனை செய்து பார்ப்பது, விருப்பங்களை விதைக்கும் பயிற்சியின் அடுத்த படியாகும். அவற்றைக் காட்சியாகக் கற்பனை செய்து, அதற்குள்ளே வாழ வேண்டும். உங்கள் எதிர்காலக் குறிக்கோள்களை ஒரு தோராயமான படமாகவும் நீங்கள் வரைந்துகொள்ளலாம். கச்சிதமாக இருக்க வேண்டுமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். வரையத் தெரியாது என்று கவலை வேண்டாம், சுமாராக எளிய படமாக வரைந்து வைத்தாலும் போதும். உங்கள் மனம் இந்தக் குறிக்கோள்களில் கவனம் செலுத்த இந்தச் செயல் உதவும்.

நாட்கள் செல்லச் செல்ல, படிப்படியாக உங்கள் குறிக்கோள்களை அடைவதற்குத் தடையாக உள்ளவற்றை உங்கள் மனம் தகர்த்தெறிந்து, உங்கள் நேர்மறை எண்ணங்களைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வரும். இயல்பாகவே நீங்கள் நேர்மறையான விஷயங்களை நோக்கிச் செல்வீர்கள், உங்கள் குறிக்கோள்களை உணரத் தொடங்குவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.