அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல் – விரைவில் பூங்காற்று திரும்பும்: விவேக்

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகை தந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர். அதன் படி இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்! நீதிக்காக வீதி வந்திருக்கிறோம். விரைவில் பூங்காற்று திரும்பும். பொதுவாக கன்னட மக்கள் அன்பானவர்கள். அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும். இது பல நாள் அரசியல். கடினம் கடப்போம்; மனிதம் படைப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.